ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபை - நல் வரவு

  ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபை 1982ம் ஆண்டு 35ம் இலக்க தேசிய கைத்தொழில் கவுன்சில் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களின் சட்டத்தின் கீழ்ஸ்ரீ லங்கா கைத்தொழில் பொருட்களை சந்தைப் படுத்துதலையும்ஏற்றுமதி செய்தலையும் உயர்த்துவதற்காக 1983ம் வருடம் 17ம் திகதி நிறுவப்பட்டது.

இது ஏற்கனவே இக்கைங்கரியங்களின் பொறுப்புகளை கையாண்டு வந்த அரச இலாகாக்களின் பின்னுரிமைக்கொண்ட ஒன்றாகும். இச்சபையின் தலைவராக இருப்பவர் அதன் தலைமை நிர்வாக உத்தியோகத்தராவார். இதன் அன்றாட செயல்பாடுகளை பொறுப்பேற்று நடத்துபவர் தொழில் சார்ந்த உத்தியோகத்தராவார். ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபையானது லக்சலஎன்ற பெயரின் கீழ் ஸ்ரீ லங்கா கைத்தொழில் பொருட்களை சந்தைப் படுத்துதலையுமஏற்றுமதி செய்தலையும் அதனை உயர்த்துவதையும் பொறுப்பாக கொண்டுள்ளது. லக்சல என்ற இதன் பெயர் இதன் பல்வித சில்லறை விலை விற்பனையைக் குறிப்பதாகும். அத்தோடு லக்சல என்ற பெயா் சபையினால் சந்தைபடுத்தப்பட்ட கைத்தொழில் பொருட்களின் விற்பனையின் அடையாளச் சின்னமாகும். இந்த அடையாளச் சின்னமானது இதன் தரத்தை உத்தரவாதப்படுத்தி நிற்பதொன்றாகும். ஸ்ரீ லங்காவில் தற்போது இச்சபை 17 லக்சல விற்பனை நிலையங்களை உள்ளடக்கியுள்ளது. அதன் மிகப்பெரிய விற்பனை நிலையம் கொழும்பில் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ளது. கொழும்பு ஸ்ரீ லங்காவின் தலை நகரமாகும். அது கொழும்பு மாவட்டத்தின் மத்திய வியாபார நிலையமாகும். இதன் விற்பனை நிலையம் நான்கு மாடி கட்டிடங்களை கொண்டுள்ள 45‚000 சதுர அடி பரப்பளவைக்கொண்ட விற்பனைகளை விளம்பரபடுத்தும் காட்சியரையையும் உள்ளடக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா கைத்தொழில் உற்பத்திகளை பல கோணங்களில் வெளி கொணரும் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. லக்சல கைத்தொழில் பொருட்களை மொத்தமாக கையிருப்பில் வைத்திருக்கும் ஒரு மாபெரும் நிறுவனமாகும். அது வினியோக கூட்டுத்தொகுதியை கொண்டுள்ள சிறந்த விற்பனை சேவை அலகுகளை கொண்டுள்ளது. ஸ்ரீ லங்கா கைத்தொழில் சபையானது தனது சொந்த 140 உற்பத்தி மற்றும் பயிற்சி நிலையங்களை கொண்டுள்ளது. இதைத்தவிர இந்த சபையானது கைத்தொழில் பொருள் வினியோகங்களுக்காக 4000 தலைசிறந்த கைத்தொழில் விற்பன்னர்களோடு ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது. சபையின் கொள்வனவு செயல்பாடுகள் ஏற்றுமதி சந்தைப்பொருட்களின் தரம்தன்மை மற்றும் அதன் தேவைகளை உத்தரவாத படுத்தும் வகையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. லக்சலவின் வியாபார வீச்சு நவீன கைத்தொழில் விற்பன்னர்களினதும் பாரம்பரிய கைத்தொழில்களையும் உள்ளடக்கியதொன்றாகும். பாரம்பரிய கைத்தொழில்களானவை பல கோடி ஆண்டுகள் வரலாற்ரைக்கொண்டுள்ள எமது நாட்டில் நுாற்றாண்டு காலமாக தொடர்ந்து பின்பற்றி வந்துள்ள ஒன்றாகும். அதன் விசேட பண்புகளுக்கு மத்தியில் இயற்கை மற்றும் விளங்கங்களுக்கப்பாற்பட்ட தன்மைகளின் பண்புகளை பிரதிபளிக்கும் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையாகும். கண்டிய வெள்ளி அல்லது செப்பு கைத்தொழில் பொருள் வனைஞர்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் வேலைப்பாடுகள் மற்றும் அமைப்புகளின் விதிகளுக்கமைய செயல்பட்டு வருகிறார்கள். அவனது தன்னியல் ஆக்கபூர்வ தொகைக்குறிப்பிற்கு இடமளிக்கப்படவில்லை. அவன் அதியுயர் கடும் ஒழுங்கு வரையரைக்குள் செயல்பட்டான். லக்சல பொருட்களில் நவீன விற்பன்னர்களின் வேலைப்பாடுகள் பல விதங்களில் பெருகி வருகின்றன. அவற்றில் சில மரபு முறைகளுக்குட்பட்ட புதுமை படைப்புகளாகும். மற்றவைகள் பெருகி வரும் சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடு தங்களின் ஆக்கத்திறமைகளையும் மெய்மைத்தன்மைகளையும் உட்படுத்திய படைப்புகளாகும்